தேங்காய் சாதம்
குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் சாதம். பள்ளி பருவத்தில் மதிய உணவாக என்னம்மா எனக்கு கட்டித்தரும் உணவுகளில் ஒன்று தேங்காய் சாதம் சுவையாக சத்து நிறைந்ததாகவும் இருக்கும் தேவையான பொருட்கள் : 1, வடித்த சாதம் ஒரு கப் 2, தேங்காய் அரை மூடி 3, கடலை எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் 4, கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு 5, கருவேப்பிலை கொத்தமல்லி 6, இஞ்சி பூண்டு 7, உப்பு தேவையான அளவு செய்முறை : 1, ஒரு கடை வைத்துக் கொள்ளவும் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் பூண்டு பற்கள் நன்றாக தட்டி எடுக்கவும். 1, மிளகாய் கருவேப்பிலை இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். 1, நன்றாக வதக்கி துருவிய தேங்காயை சேர்க்கவும்.உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 1, தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். 2, வடித்த சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் தயார்.