சிறுகீரை கடையல்
தேவையான பொருட்கள் : சிறுகீரை ஒரு கத்தை வெங்காயம்-2 தக்காளி-3 காய்ந்த மிளகாய் 4 பச்சை மிளகாய் 4 புளி எலுமிச்சை அளவு எண்ணை 3 tsp மஞ்சள் தூள் -1/2 tsp தாளிக்க எண்ணெய் - 2 tsp கடுகு-1/2 tsp கருவேப்பிலை செய்முறை விளக்கம் : ஒரு கத்தை சிறுகீரை எடுத்துக் கொள்ளவும். கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் 2 வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு தக்காளி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கி வந்ததும் வெட்டி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் மற்றும் ஒரு எலுமிச்சை அளவு புளி சேர்த்து நன்றாக வதக்கி விடவும். தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த கீரையை நன்றாக அலசி அதனுடன் சேர்த்து வதக்கவும். கீரையை சேர்த்து கீரை நன்றாக வேக அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். கீரை நன்றாக வெந்த...