சாம்பார்

தேவையான பொருட்கள்
  •  துவரம் பருப்பு 1/2 கப்
  •  பாசிப்பருப்பு  1/4 கப்
  •  தக்காளி-2
  •  பூண்டு 10 பல்
  •  வெங்காயம்-1
  •  புளி  நெல்லிக்காயளவு
  •  பச்சை மிளகாய் 3
  •  தனி மிளகாய் தூள் 1 tsp
  •  மஞ்சள் தூள் 1/2 tsp
  •  உப்பு தேவையான அளவு

 சாம்பார் தாளிக்க.
  •  எண்ணெய் 3 tsp
  •  கடுகு  1/2 tsp
  •  வெங்காயம்-1
  •  கருவேப்பிலை ஒரு கொத்து
 செய்முறை விளக்கம் .


  •  முதலில் ஒரு குக்கரில் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்க்கவும்.
 சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

 பின் தக்காளி பச்சை மிளகாய் ஒரு வெங்காயம் 10 பல் பூண்டு சேர்க்கவும்.
  •  பின் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.


  •  கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்

  • . அரை மேஜைக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்க்கவும்.
  •  சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  •  பின் குக்கரை மூடி 4 விசில் விடவும்.
  •  4 விசில் வந்ததும் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


  •  ஒரு மத்து வைத்து பருப்பை நன்கு கடைந்து கொள்ளவும்.

  •  புளி கரைசலை சேர்க்கவும்.

  •  தாளிக்க ஒரு கடாயில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் அரை மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
  •  கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  •  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கடைந்து வைத்த பருப்பு கரைசலை சேர்க்கவும்.
  •  சாம்பார் ஒரு கொதி வந்தவுடன் கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
 சுவையான சாம்பார் தயார் வெள்ளை சாதம் மற்றும் இட்லி தோசையுடன் ஏற்றதாக இருக்கும்.

 தயாரிப்பு நேரம்
 5 நிமிடம்

 சமையல் நேரம்
 15 நிமிடம்

 மொத்த நேரம்
 20 நிமிடம்

 பரிமாறுதல்

 5பேர்


 துவரம்பருப்புடன் சிறிது பாசிபருப்பு சேர்க்கும்போது சுவை மிகுந்து இருக்கும் இட்லி தோசை சாதத்துடன் பரிமாறலாம் 10லிருந்து 15 நிமிடத்தில் எளிய முறையில் செய்யக்கூடிய சாம்பார் https://menamohan.blogspot.com/2022/03/blog-post_9.html?m=1


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு