மீன் வருவல்
தேவையான பொருட்கள் :
1, மீன் 1/2 கிலோ
2, அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
3, அரை எலுமிச்சம்பழம் சாறு
4, மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
5, மஞ்சள் தூள் கால் மேசைக்கரண்டி
6, இஞ்சி பூண்டு விழுது 1 tsp
7, உப்பு தேவையான அளவு
8, எண்ணெய் பொரித்தெடுக்க.
செய்முறை விளக்கம் படத்துடன்
1, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் அரை எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
1, சேர்த்து நன்கு கலந்து விடவும்.
1, சேர்த்து நன்கு கலந்து விடவும்.
2, மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து மசாலா நன்கு தடவி வைக்கவும்.1, மசாலா தடவிய மீன் துண்டுகளை ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்
2, ஒரு மணி நேரம் ஊறிய பின் பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
1, இரண்டு பக்கமும் நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.1, அரிசி மாவு செயற்பாட்டினால் மீனில் இருக்கும் மசாலா சிறிது எண்ணெயில் உதிராமல் இருக்கும்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
ஓய்வு நேரம்
1 மணி நேரம்
சமையல் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
சமையல் முறை
தென்னிந்திய சமையல் முறை
பரிமாறுதல்
மூன்று பேர்
குறிப்பு
அசைவ உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு மீன் வருவல் என் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகவும் உள்ளது
இந்த மீன் வருவல் மிக சுவை மிகுந்ததாக இருக்கும்.
இதில் அரிசி மாவு சேர்ப்பது அவசியம் மசாலா மீனில் இருந்து உதிராமல் இருக்க அரிசி மாவு உதவி செய்யும் மொறுமொறுப்பு தன்மையை கூட்டும் கண்டிப்பாக முயற்சிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக