முள்ளங்கி கீரை பொரியல்
தேவையான பொருட்கள் :
1, முள்ளங்கிக்கீரை
2, கடலை எண்ணெய் 3 tsp
3, கடுகு சீரகம் -1/2 tsp
4, வெங்காயம்-1
5, தக்காளி-1
6, உப்பு தேவையான அளவு
வறுத்து அரைக்க :
1, வேர்க்கடலை தேவையான அளவு
2, காய்ந்த மிளகாய் 5
3, பூண்டு 6 பல்
1, வேர்க்கடலை பூண்டு காய்ந்த மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை க்கு செல்லவும்.
1, முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வாங்குவது கீரையை கீழே போடாமல் இந்தவகையில் பொரியல் செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் வெறும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
2, கீரையை தனியாக வெட்டி எடுத்து நன்றாக அலசி சிறிது துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2, கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 1, வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
2, பின் வெட்டிவைத்த முள்ளங்கி கீரைகளை சேர்த்து வதக்கவும்.1, கீரையை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
2, கீரை நன்கு வெந்த உடன் அரைத்து வைத்த வேர்க்கடலை சேர்க்கவும்.1, வேர்க்கடலைப் பொடியை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கலந்துவிடவும்.1, சுவையான முள்ளங்கி கீரை பொரியல் தயார்.
கீரை பொரியல் சாம்பார் சாதத்துடன் மற்றும் ரசம் சாதத்துடன் அருமையான சைட் டிஷ்
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
சமையல் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
சமையல் முறை
கிராமத்து சமையல் முறை
இந்த வகை முள்ளங்கி கீரை பொரியல் பாட்டி என் சிறுவயதில் செய்து கொடுக்கும் பொரியல் வகைகளில் ஒன்று நீங்களும் இந்த முறையில் சமைத்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக