சிறுகீரை கடையல்
தேவையான பொருட்கள் :
- சிறுகீரை ஒரு கத்தை
- வெங்காயம்-2
- தக்காளி-3
- காய்ந்த மிளகாய் 4
- பச்சை மிளகாய் 4
- புளி எலுமிச்சை அளவு
- எண்ணை 3 tsp
- மஞ்சள் தூள் -1/2 tsp
- தாளிக்க
- எண்ணெய் - 2 tsp
- கடுகு-1/2 tsp
- கருவேப்பிலை
- கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் 2 வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு தக்காளி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி போல் வதங்கி வந்ததும் வெட்டி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த கீரையை நன்றாக அலசி அதனுடன் சேர்த்து வதக்கவும்.
- கீரையை சேர்த்து கீரை நன்றாக வேக அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
- கீரையை கல் சட்டியில் மாற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.
- கீரைக் அடைந்ததும் தாளிக்க ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்.
- இந்த தாலிப்பை கீரை கடையலில் சேர்க்கவும்.
இப்போது சுவையான கீரை கடையல் தயார்
சூடான வெள்ளை சாதத்துடன் பரிமாறவும்.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
சமையல் நேரம்
15 நிமிடம்
மொத்த நேரம்
25 நிமிடம்
சமையல் முறை
கிராமத்து சமையல் முறை.
பரிமாறல்
4 பேர்
உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.











கருத்துகள்
கருத்துரையிடுக