தக்காளி சாதம்

 தேவையான பொருட்கள் :
1, எண்ணை 4 மேஜைக்கரண்டி
2, கடுகு கால் மேஜைக்கரண்டி
 3, வெங்காயம்-2
4, பூண்டு 10 பல்
5, கருவேப்பிலை ஒரு கொத்து
6, தக்காளி 5 பழம்
7, உப்பு தேவையான அளவு
8, மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
9, மல்லித்தூள் 2 மேஜைக்கரண்டி
10, மஞ்சள் தூள் 1/4 மேசைக்கரண்டி
11, மல்லி சிறிதளவு
12, வடித்த சாதம் ஒரு கப்

 செய்முறை விளக்கம் படத்துடன் :
1, 4 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்.

2, கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்க்கவும்.1, வெங்காயம் செய்தவுடன் சிறிதாக நறுக்கி வைத்த பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

2, வெங்காயம் கண்ணாடி போல் வதங்கி வந்ததும் வெட்டி வைத்த தக்காளியை சேர்க்கவும்.
1, தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.1, தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள் சேர்க்கவும்.1, ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விடவும் பின் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.1, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட மிளகாய் தோலின் பச்சை வாசனை போகும் அளவிற்கு நன்கு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
2, கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கடைசியாக மல்லித்தழை சேர்த்து கலந்து விடவும்.1, பின் வடித்து வைத்த சாதம் சேர்க்கவும்.1, சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும் சுவையான தக்காளி சாதம் தயார்.



 தயாரிப்பு நேரம்
 5 நிமிடம்

 சமையல் நேரம்
 10 நிமிடம்

 மொத்த நேரம்
 15 நிமிடம்

 சமையல் முறை
 இந்திய சமையல் முறை

 பரிமாறல்
 நான்கு பேர்

 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தக்காளிசாதம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மதிய உணவாக அடிக்கடி தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு