தக்காளி சாஸ்

 தேவையான பொருட்கள்
1, தக்காளி -1/2 கிலோ
2, வெங்காயம் -1 சிறியது
3, பூண்டு 3 பல்
4, உப்பு தேவையான அளவு
5, சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
6, மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
7, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு இரண்டு மேஜைக்கரண்டி

 செய்முறை விளக்கம் படத்துடன்.1,  தக்காளியை நன்கு கழுவி நான்காக வெட்டி ஒரு கடையில் சேர்க்கவும்.
2, ஒரு சிறிய வெங்காயம் வெட்டி அதனுடன்  சேர்த்துக்கொள்ளவும்.
1, 3 பல் பூண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் தக்காளி நன்றாக வேகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.1, தக்காளி நன்கு வெந்ததும் இறக்கி 10 நிமிடம் ஆற வைக்கவும்.1, தக்காளி ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.1, அரைத்த தக்காளி விழுதை ஒரு வடிகட்டியால் நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.1, அரைத்து வடித்து வைத்த தக்காளி விழுதில் இரண்டு மேசைக்கரண்டி சர்க்கரை தேவையான அளவு உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் சேர்க்கவும்.1, நன்கு கெட்டியாகும் வரை தக்காளி சாஸ் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.1, தக்காளி சாஸ் சரியான பதத்திற்கு வந்தவுடன் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
1, தக்காளி சாஸ் சரியான பதத்திற்கு வந்துவிட்டதா என்று தெரிந்துகொள்ள ஒரு தட்டில் சிறிதளவு சாஸ்  ஊற்றவும் அதன் நடுவில் ஒரு கோடு போட்டால் இரண்டும் ஒட்டாமல் இருக்க வேண்டும் இதுவே சரியான பதம்
2, சுவையான தக்காளி சாஸ் தயார்

குறிப்பு :

 வினிகர் இல்லையென்றால் எலுமிச்சை பழ சாறு சேர்க்கலாம் சுவையில் எந்த வித்தியாசமும் இல்லை கடையில் வாங்கும் அதே சுவையில் இருந்தது.

 தயாரிப்பு நேரம்
 5 நிமிடம்

 செய்யும் நேரம்
 15 நிமிடம்

 மொத்த நேரம்
20 நிமிடம்

 பரிமாறப்படும் உணவுகள் பஜ்ஜி போண்டா சமோசா பிரைடு ரைஸ் போன்ற உணவுகளுடன் பரிமாறலாம் செய்முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது சுவையில் எந்த மாறுதலும் இல்லை கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு