வாழைப்பூ பருப்பு கூட்டு


 தேவையான பொருட்கள்

1. வாழைப்பூ 2
2. வெங்காயம் 2
3. தக்காளி 1
4. பூண்டு 5 பல்
5. சீரகம் 1/2 மேசை கரண்டி
6. மஞ்சள் சிறிதளவு
7. பாசிப்பருப்பு 50 கிராம்
8. துவரம் பருப்பு 50 கிராம்
9. பச்சை மிளகாய் 4
10. எண்ணெய் 4 மேஜை கரண்டி
11. கடுகு வெந்தயம் சீரகம் 1 tsp
12.கருவேப்பிலை காய்ந்த மிளகாய்

 செய்முறை விளக்கம் படத்துடன்
1. ஒரு குக்கரில் பாசிப்பருப்பு துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு அலசி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
2. அருள்மிகு கரண்டி மஞ்சள் தூள் நான்கு பச்சை மிளகாய் 6 மேஜிக் கரண்டி சீரகம் சேர்க்கவும்.
1. ஒரு பெரிய வெங்காயம் ஒரு பெரிய தக்காளி ஐந்து பல் பூண்டு சேர்க்கவும்.
2, சேர்த்து குக்கர் மூடி மூன்று விசில் விடவும்.
1. பருப்பு நன்கு வெந்ததும்  ஒரு மத்து வைத்து கடைந்து  கொள்ளவும்.
1. ஒரு கடையில் நான்கு மெசேஜ் கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
2. வெட்டி வைத்த ஒரு வெங்காயம் சிறிது கருவேப்பிலையின் நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
1. வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கி வைத்த வாழைப்பூக்களை நன்கு அலசி சேர்க்கவும்.
2. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

1. வாய்ப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கி மசித்து வைத்த பருப்பு கடையலை சேர்க்கவும்.
2, சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ கூட்டு தயார்.

 குறிப்பு
 வாழைப்பூ கசக்காமல் இருக்க
 வேகவைத்து தண்ணீர் வடித்து  கொள்ளவும்.

 சமையல் முறை
 கிராமத்து சமையல் முறை
 சமையல் நேரம்
 10 நிமிடம்
 தயாரிப்பு நேரம்
 10 நிமிடம்

 வாழைப்பூவின் பயன்கள்.
வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும், மலச்சிக்கலை தணிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். 




RTBS OFFER
: Actual Whole Mouth Dental Implant Cost In 2022 (See List!)
LEARN MORE

 
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. 
 
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். 
அனைத்து பகுதிகளும் பயன்தரும் பப்பாளி !! Useful papaya in all Parts !!
 
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். 

 
மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும். 
 
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு