முருங்கைக்காய் தொக்கு.
தேவையான பொருட்கள்.
- முருங்கைக்காய் -4
- வெங்காயம்-2
- பூண்டு 20 பல்
- தக்காளி மூன்று
- புளி சிறு நெல்லிக்காய் அளவு
- வெல்லம் நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
- குழம்பு மிளகாய் தூள்- 1 tsp
- மஞ்சள் தூள் -1/4 tsp
- மல்லித்தூள் -1 tsp
- எண்ணை 4 மேஜைக்கரண்டி
- கடுகு சீரகம் வெந்தயம் -1 tsp
- கருவேப்பிலை சிறிதளவு
செய்முறை விளக்கம் படத்துடன்
- ஒரு கடாய் வைத்து நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சீரகம் கடுகு வெந்தயம் சேர்க்கவும்
- கடுகு பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- தக்காளி நன்கு வதங்கியதும் முருங்கைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்
- மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் சேர்க்கவும்.
- முருங்கைக்காய் முக்கால் பங்கு வெந்தவுடன் புளிக்கரைசலை சேர்க்கவும்
சமையல் நேரம்
15 நிமிடம்
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
மொத்த நேரம்
20 நிமிடம்
சமையல் முறை
கிராமத்து சமையல்.
மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.






கருத்துகள்
கருத்துரையிடுக