கோலா மீன் குழம்பு.



 தேவையான பொருட்கள்
  •  கோலா மீன் ஒரு கிலோ
  •  வெங்காயம் 300 கிராம்
  •  பூண்டு  100 கிராம்
  •  தக்காளி 200 கிராம்
  •  கருவேப்பிலை சிறிதளவு
  •  பச்சை மிளகாய் 5
  •  குழம்பு மிளகாய் தூள் 5 tsp
  •  மஞ்சள் தூள் 1/2 tsp
  •  புளி எலுமிச்சை அளவு 
  •  உப்பு தேவையான அளவு 
  • கடலை எண்ணெய் 150 கிராம் கடுகு சீரகம் வெந்தயம்1 ட்ஸப்
 மீன் குழம்பு மசாலா செய்முறை


  •  
  •  முதலில் ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  •  எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் 5 காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.
  •  வெங்காயம் வழங்க தேவையான அளவு உப்பு சேர்க்கவும் அதனுடன் 4 பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  •  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்த தக்காளி சேர்க்கவும்.
  •  அதனுடன் அரை மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
  •  தக்காளி நன்கு வதங்கியவுடன் ஒரு தட்டில் மாற்றி நன்கு ஆற வைக்கவும்.
  •  மசாலா ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மசாலா தயார்.
 மீன் குழம்பு செய்முறை :


  •  ஒரு அகலமான பாத்திரம் வைத்துக்கொள்ளவும் அதில் 150 கிராம் கடலை எண்ணெய் சேர்க்கவும்.
  •  எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் வெந்தயம் தலா ஒரு மேஜைக்கரண்டி அளவு சேர்க்கவும்.
  •  கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  •  பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  •  மசாலா வகைகள் எதுவும் காலத்திற்கு ஏற்றவாறு குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
  •  தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக மசாலாவுடன் வதக்கி விடவும்.
  •  ஒரு எலுமிச்சை அளவு புளியை நன்றாக கரைத்து மசாலாவில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  •  குழம்பு நன்றாக கொதித்து புளியின் பச்சை வாசனை போன பின் சுத்தம் செய்து வைத்த கோலா மீன் துண்டுகளை சேர்க்கவும்.
  •  ஒவ்வொரு துண்டுகளாக சேர்க்கவும். அகலமான பாத்திரத்தில் சமைப்பதால் மீன் துண்டுகள் உடையாமல் இருக்கும்.
  •  மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
  •  கடைசியாக கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
 சுவையான கோலா மீன் குழம்பு தயார்.



 தயாரிப்பு நேரம்
 10 நிமிடம்

 சமையல் நேரம்
 20 நிமிடம்

 மொத்த நேரம்
 30 நிமிடம்

 சமையல் முறை
 கிராமத்து சமையல் வகைகள்



மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா...? மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு