ரவா கேசரி

 தேவையான பொருட்கள்:
1, ரவை 200 கிராம்
2, எண்ணெய் அல்லது நெய் 50 கிராம்
3, முந்திரி திராட்சை ஏலக்காய்
4, உப்பு ஒரு சிட்டிகை
5, சர்க்கரை 150 கிராம்
6, தண்ணீர் 400 கிராம்
7, ஃபுட் கலர் ஒரு சிட்டிகை

 செய்முறை விளக்கம் படத்துடன்.:
1, இருநூறு கிராம் ரவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2, ஒரு பாத்திரத்தில் 50 கிராம் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.

3, எண்ணை காய்ந்ததும் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து வறுக்கவும்.
1, முந்திரி வறுபட்டதும் 400 கிராம் தண்ணீர் சேர்க்கவும்.

2, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 150 கிராம் சர்க்கரை சேர்க்கவும். 1, தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்க்கவும்.

2, பின் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து விடவும் கைவிடாமல்.

3, கடைசியாக இடித்து வைத்து ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும்.
1, சுவையான ரவா கேசரி தயார்

 சமையல் நேரம்
15 நிமிடம்

 தமிழர்களின் மிக முக்கிய இனிப்பு பண்டங்களில் ஒன்று ரவாகேசரி திருவிழாக்கள் விசேஷ தினங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது ரவா கேசரி மிகவும் சுவையாகவும் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பண்டம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு