நூடுல்ஸ் 😋

தேவையான பொருட்கள் :
1, நூடுல்ஸ் 1 பாக்கெட்
2, எண்ணை 4 மேஜைக்கரண்டி
3, வெங்காயம்-2
4, தக்காளி-2
5, இஞ்சி பூண்டு விழுது 1tsp
6, காஷ்மீரி மிளகாய்த்தூள் 1tsp
7, உப்பு தேவையான அளவு
8, சர்க்கரை ஒரு மேசைக்கரண்டி

 குறிப்பு:
 நூடுல்ஸை கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வெந்ததும் வடித்து வைத்துக்கொள்ளவும் ஒட்டாமல் இருக்க  சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

 செய்முறை விளக்கம் படத்துடன் :
1, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
1, தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் எடுத்து வைத்த நூடுல்ஸ் முழுமையாக சேர்த்து நன்கு வெந்தவுடன்  வடித்து வைத்துக் கொள்ளவும்.
1, நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
2, ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் சேர்க்கவும்.

3, எண்ணை காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.1, வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
2, ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.1, ஒரு மேஜைக்கரண்டி கஷ்மிரி சில்லி பவுடர் ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து வதக்கி விடவும்.
1, மிளகாய் தூள் இன் பச்சை வாசனை போனதும் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
1, ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ் ஊற்றி நன்கு கிளறி விடவும்.1, சுவையான நூடுல்ஸ் தயார்.


 தயாரிப்பு நேரம்
10 நிமிடம்

 சமையல் நேரம்
10 நிமிடம்

 மொத்த நேரம்
20 நிமிடம் 


 நூடுல்ஸ் வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சமையல் முறை நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு அடிக்கடி சமைத்து தராமல் மாதம் இரண்டு முறை மட்டுமே சமைத்து தரலாம் இந்த முறை மிகவும் சுலபமாக இந்திய மசாலாக்கள் பயன்படுத்திய
 சமையல் முறை,  தக்காளி சேர்க்காமல் தக்காளி சாஸ் பயன்படுத்தலாம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சுவையில் சமைக்கலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு