கருணைக்கிழங்கு 65
தேவையான பொருட்கள் :
1, கருணைக்கிழங்கு 300 கிராம்
2, அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
3, சோள மாவு ஒரு மேஜைக்கரண்டி
4, மஞ்சள் தூள் 1/4 tsp
5, மிளகாய் தூள் 1 tsp
6, அரை எலுமிச்சை பழச்சாறு
7, உப்பு தேவையான அளவு
செய்முறை விளக்கம் படத்துடன் :
1, கருணைக் கிழங்கின் தோல்களை அகற்றி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
11, அரிசி மாவு சோள மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
11, அரிசி மாவு சோள மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
1, தேவையான அளவு உப்பு மற்றும் அரை எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.1, அனைத்தையும் நன்றாக கலந்து வெட்டி வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்து விடவும்.1, பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு சூடானதும் கலந்து வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 1, சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து பொரிக்கவும் மொறுமொறுப்பான கருணைக்கிழங்கு 65 தயார்.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
சமையல் நேரம்
5 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
பரிமாறல்
3 பேர்
கருணைக்கிழங்கு 65 கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு சைட் டிஷ் வீட்டிலும் சமைப்பது சுலபம் சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக