வாழைக்காய் வறுவல்

, தேவையான பொருட்கள் :

1, வாழைக்காய் 2
2, தனி மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
3, அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
4, சோள மாவு ஒரு மேசைக்கரண்டி
5, உப்பு தேவையான அளவு
6, இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
7, வறுத்தெடுத்த தேவையான அளவு எண்ணெய்

 குறிப்பு:
 வாழைக்காய் தோல்களை சீவி வட்ட வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

 செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெதுவெதுப்பாக காய்த்து வைத்துக் கொள்ளவும் 
2, அதில் சிறிது மஞ்சள் உப்பு சேர்க்கவும்.
3, வெட்டி வைத்த வாழைக்காய் துண்டுகளை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் அப்படியே விடவும்.
4, 5 நிமிடம் கழித்து வடித்து எடுக்கவும்.
1, ஒரு அகலமான பாத்திரம் வைத்துக் கொள்ளவும்.
 அதில் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் உப்பு அரிசி மாவு சோள மாவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
1, நன்றாக கலந்து விடவும் பின் வடித்து வைத்த வாழைக்காய் துண்டுகளை மசாலாவில் நன்றாக கலந்து விடவும்.
1, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து வைத்த வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.1, பின் வாழைக்காய் துண்டுகளை இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.

 தயாரிப்பு நேரம்
10 நிமிடம் 

 சமையல் நேரம்
10நிமிடம் 

 மொத்த நேரம்
20நிமிடம் 

 சமையல்
 இந்திய சமையல் முறை

 வாழைக்காய் பொரியல் சாம்பார் சாதம்,ரசம் சாதம், தயிர் சாதம்             புளி சாதம், எலுமிச்சை சாதம்
 அனைத்திற்கும் சுவையான சைடு டிஷ் ஆகும் இவ்வகை வாழைக்காய் வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைக்காய்  வறுவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு