கோதுமை இட்லி

 தேவையான பொருட்கள்
1, இட்லி அரிசி ஒரு கப்
2, பச்சரிசி ஒரு கப்
3, கோதுமை அரை கப்
4, உளுந்து அரை கப்
5, வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி
6, உப்பு தேவையான அளவு
7, சோடா உப்பு கால் டீஸ்பூன்

 செய்முறை விளக்கம் படத்துடன் :
1, பச்சரிசி இட்லி அரிசி கோதுமை அரை கப் எடுத்துக் கொள்ளவும்.
1, உளுந்து அரை கப் வெந்தயம் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
1, அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீரில் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
1, அரிசி நன்கு ஊறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
2, அரைத்த மாவை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
1, மாவு நன்கு குளித்து வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
1, இட்லி மாவு பதத்திற்கு திக்காக கரைத்து இட்லி தட்டில் மாவை  வார்க்கவும்.1, இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து தண்ணீர் கொதி வந்ததும் இட்லி தட்டை வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
2, இட்லி வெந்த தான் என்று தெரிந்து கொள்ள ஒரு கத்தி அல்லது ஒரு குச்சியினால் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் இட்லி வெந்து விட்டது என்று அர்த்தம்.1, மிருதுவான பஞ்சு போன்ற கோதுமை இட்லி 1, சாம்பார் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.


 தயாரிப்பு நேரம்
 15 நிமிடம் 


 சமையல் நேரம்
 பத்து நிமிடம் 


 அரிசி ஊறும் நேரம்
 ஐந்து மணி நேரம் 


 மாவு  புளிக்க வைக்கும் நேரம்
 6 மணி நேரம்

  இட்லி வகைகளில் ஒன்று கோதுமை இட்லி தமிழ்நாட்டில்  பலவிதமான இட்லி வகைகள் உள்ளது அதில் ஒன்று கோதுமை இட்லி  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கோதுமை இட்லி எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவு குறையும் சுவையானதாகவும் சத்து மிக்கதாகவும் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு