மட்டன் தொக்கு
தேவையான பொருட்கள் :
1, மட்டன் 300 கிராம்
2, சின்ன வெங்காயம் 20
3, தக்காளி 2
4, இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
5, குழம்பு மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
6, காஷ்மீரி மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
7, உப்பு தேவையான அளவு
மட்டன் குக்கரில் சேர்த்து வேகவைக்க தேவையான பொருட்கள்
1, குக்கரில் 300 கிராம் மட்டன் சேர்க்கவும்.
அதில் தேவையான அளவு உப்பு ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது ஒரு பெரிய வெங்காயம் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் இரண்டு பச்சை மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து 6 விசில் வைக்கவும்.
செய்முறை :
1, ஒரு குக்கரில் மட்டன் துண்டுகளை சேர்க்கவும் 2 பச்சை மிளகாய் வெட்டி சேர்க்கவும்.
2, ஒரு பெரிய வெங்காயம் சேர்க்கவும் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.1, தேவையான அளவு உப்பு மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய். அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் 1, குக்கர் மூடி 5லிருந்து 6 விசில் வைத்து மட்டன் துண்டுகளை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
2, தாளிக்க 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.1, எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் சோம்பு சேர்க்கவும்
2, சோம்பு பொரிந்ததும் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
3, வெங்காயம் வதங்கியதும் இரண்டு தக்காளிகளை நறுக்கி சேர்க்கவும்.1, தக்காளி வதக்கி தேவையான அளவு உப்பு ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
2, பின் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்க்கவும்.1, ஒரு மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் அரை மேஜைக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.1, மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை நன்கு தண்ணீர் சுண்ட வதக்கிக் கொள்ளவும்
2, கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
3, சுவையான மட்டன் தொக்கு தயார்.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
சமையல் நேரம்
15 நிமிடம்
மொத்த நேரம்
25 நிமிடம்
பரிமாறல் சமையல்
3 பேர் இந்திய முறை
மட்டன் தொக்கு
மட்டன் தொக்கு இந்திய சைவ உணவுகளில் ஒன்று இந்த வகை மட்டன் தொக்கு ரசம் சாதம் சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு மிகவும் பொருத்தமான சைட் டிஷ்.
கருத்துகள்
கருத்துரையிடுக