பாம்பே கராச்சி அல்வா.

 தேவையான பொருட்கள் :1, சோள மாவு 100 கிராம்
2, சர்க்கரை 150 கிராம்
3, முந்திரி பாதாம் உலர் திராட்சை
4, நெய் 4 டேபிள்ஸ்பூன்
5, தண்ணீர் 300 கிராம்
6, ஏலக்காய்தூள் அரை டேபிள்ஸ்பூன்
7, ஃபுட் கலர் சிறிதளவு
8, உப்பு ஒரு சிட்டிகை.

 செய்முறை :
1, முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.
2, சோளமாவு அளந்த அதே கப்பில் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.1, மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
2, தண்ணீர் கொதி வந்தவுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து விடவும்.1, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
2, சர்க்கரை நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும்.
3, கலந்து வைத்த சோள மாவு கரைசலை சேர்க்கவும்.
4, கைவிடாமல் கலந்துவிடவும்.1, சோளமாவு கண்ணாடி பதத்திற்கு வந்ததும் ஃபுட் கலர் சேர்த்து கலந்து விடவும்.
2, 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும். நெய் சிறிது சிறிதாக சேர்க்கவும் 5 டேபிள்ஸ்பூன் வரை சேர்க்கலாம்.1, கடைசியாக முந்திரி திராட்சை பாதாம் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
2, அல்வா பதத்திற்கு சுருண்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கவும்
3, ஒரு பாத்திரத்தில் நெய் தடவி எடுத்து வைத்த முந்திரி பாதாம் உலர் திராட்சையை சிறிது சேர்க்கவும்.1, செய்து வைத்த அல்வாவை அந்த பாத்திரத்தில் சேர்க்கவும்.
2, சேர்த்து 2 மணி நேரம்வரை ஆறவிடவும்.
3, ஆறியதும் ஒரு தட்டில் இருக்கும் மாற்றி கட் செய்து பரிமாறவும்.1, சுவையான மிருதுவான பாம்பே கராச்சி அல்வா தயார்.
                                              
 தயாரிப்ப     செய்யும்        மொத்த 
நேரம்          +     நேரம்         =     நேரம்
5 நிமிடம் + 20 நிமிடம் = 25 நிமிடம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு