வாழைக்காய், மிளகாய் பஜ்ஜி

 தேவையான பொருட்கள் :
1, பஜ்ஜி மிளகாய் 5
2, வாழைக்காய் 1
3, பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்
4, கடலை மாவு 200 கிராம்
5, அரிசி மாவு 100 கிராம்
6, உப்பு தண்ணீர் தேவையான அளவு
7, இஞ்சி பூண்டு விழுது ஒரு tsp
8,  மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய் பஜ்ஜி ஸ்டாப்பிங்
 செய்முறை 1,  வெங்காயம்-1
2, வெல்லம் ஒரு மேசைக்கரண்டி
3, உப்பு தேவையான அளவு
4, மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
5, புளிக்கரைசல் இரண்டு மேஜைக்கரண்டி
 அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

 இரண்டாவது ஸ்டாப்பிங்
1,  இரண்டு கேரட்டை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளவும்
 ஒரு கடாயில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி கடுகு உளுந்து சீரகம் அனைத்தும் சேர்த்து தாளித்து துருவிய கேரட் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவும். இதுவே பஜ்ஜி மிளகாய் கான ஸ்டாப்பிங் 

 பஜ்ஜி செய்முறை:1,  பஜ்ஜி மிளகாயை எடுத்து மேலிருந்து கீழ்வரை ஒரு கீறல் போட்டுக்கொள்ளவும்.
2, அதில் கேரட் பொரியல் மேலிருந்து கீழாக நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.1, பின் வெங்காய புளி கரைசல் மிளகாயில்  ஸ்டாப்பிங்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.
2, 200 கிராம் கடலை மாவு 100 கிராம் அரிசி மாவு சேர்க்கவும்.1, மாவில் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது அரை மேசைக்கரண்டி மிளகாய்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.1, ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு கடலை எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்ததும்.
2, ஒவ்வொரு மிளகாயும் எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் சேர்க்கவும்.
3, வாழைக்காய் இவ்வாறு மாவில் முக்கி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்,1, வாழைக்காய் பஜ்ஜியும் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
2, மிகச் சுவையான மிளகாய் வாழைக்காய் பஜ்ஜி தயார்.1, வெங்காய ஸ்டாப்பிங் கேரட் ஸ்டாப்பிங் இரண்டு மிகச் சுவையாக இருக்கும் தக்காளி சாஸ் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

                                                 
 தயாரிப்பு நேரம்
 15 நிமிடம்

 சமையல் நேரம்
10 நிமிடம்

 மொத்த நேரம்
  25 நிமிடம்
        
                                       

 பரிமாறல்                     சமையல் 
4 முதல் 5 பேர்                 இந்திய உணவு 
       
                                  
 வாழைக்காய் பஜ்ஜி நாம் மாலை வேலைகளில் விரும்பி  உண்ணக்கூடிய  சிற்றுண்டி ஆகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வாழைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி தக்காளி சாஸ் மற்றும் தேங்காய் சட்னி புதினா சட்னி உடன் பரிமாறும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும்.

 சமையல் ஆசிரியர்
 M. Menaga.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு