மாங்காய் இனிப்பு பச்சடி

 மாங்காய் இனிப்பு பச்சடி தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் மாங்காய் சீசன்களில் அதிகம் சமைக்கக் கூடிய ஒரு இனிப்பு பச்சடி சாம்பார் சாதம் கஞ்சி கூழ் ஆகியவற்றுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடும் போது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் மாங்காய் பச்சடி இனிப்பு காரம் புளிப்பு துவர்ப்பு அனைத்தும் கலந்து ஒரு சுவையான பச்சடி
 தேவையான பொருட்கள் :
1. மாங்காய் 2
2, வெங்காயம்-1
3, பூண்டு 10 பல்
4, காய்ந்த மிளகாய் 4
5, கருவேப்பிலை ஒரு கொத்து
6, என்னை 3 மேஜைக்கரண்டி
7, கடுகு சீரகம் அரை மேசைக்கரண்டி
8, தனி மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
9, உப்பு தேவையான அளவு
10, வெல்லம் அல்லது சர்க்கரை தேவையான அளவு

 செய்முறை :1, முதலில் மாங்காய் தோல்களை நன்கு சீவி சிறு துண்டுகளாக வெட்டி  செய்து வைத்துக் கொள்ளவும்.1, ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
2, கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.1, வெங்காயம் வதங்கியதும் வெட்டி வைத்த மாங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
1, தேவையான அளவு உப்பு மற்றும் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.1, ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி விடவும்.
1, மாங்காய் துண்டுகள் நன்கு வெந்ததும் இறுதியாக வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்
2, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.1, இப்போதெல்லாம் சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி தயார்.

<small><small>110 calories, protein 1.5 g
Carbohydrate21.2g, fat 1.8 g 
sodium 48.6 mg , full nutrition 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு