பச்சைப் பட்டாணி குருமா
, தேவையான பொருட்கள்:
1, எண்ணை 4 மேஜைக்கரண்டி
2, கடுகு அரை மேசைக்கரண்டி
3, வெங்காயம் 2 பெரியது
4, இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி.
5, கருவேப்பிலை ஒரு கொத்து
6, தக்காளி-3
7, குழம்பு மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி
8, மஞ்சள் தூள் கால் மேசைக்கரண்டி
9, கேரட் உருளைக்கிழங்கு ஒன்று
10, உப்பு தேவையான அளவு
மசாலா அரைக்க:
1, பட்டை, லவங்கம், ஏலக்காய் -2
2, சோம்பு அரை மேசைக்கரண்டி
3, கல்லை 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
1, பச்சைப் பட்டாணியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.
2, உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்.1, ஒரு குக்கர் வைத்துக்கொள்ளவும் 4 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
2, எண்ணை காய்ந்ததும் அரை மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
3, கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காய துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.1, வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
1, தக்காளி வதங்கியதும் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
2, தேவையான அளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் 2 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.1, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்.
2, குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
சுவையான பட்டாணி குருமா தயார்.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
சமையல் நேரம்
15 நிமிடம்
மொத்த நேரம்
25 நிமிடம்
பரிமாறல் சமையல்
5 பேர் சவுத் இந்தியன்
பச்சை பட்டாணி குருமா இட்லி தோசை சப்பாத்தி போன்றவைக்கு அருமையான சைட் டிஷ் ஆகும் காலை உணவிற்கு பெரியதும் சாம்பார் சட்னிக்கு அடுத்து பட்டாணி குருமா வைக்கப்படுகிறது. சுவையானதாகவும் புரோட்டின் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது..
சமையல் ஆசிரியர்
M. Menaga
கருத்துகள்
கருத்துரையிடுக