வாழைக்காய் வறுவல்

 தேவையான பொருட்கள் :
1,  எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
2,  கடுகு சீரகம் அரை மேசைக்கரண்டி
3,  வெங்காயம் ஒன்று
4,  பூண்டு 10 பல்
5,  தக்காளி-2
6,  வாழைக்காய் 4
7, குழம்பு மிளகாய் தூள் 2     மேசைக்கரண்டி
8,  மஞ்சள் தூள் கால் மேசைக்கரண்டி
9,  உப்பு தேவையான அளவு
10, கொத்தமல்லி கருவேப்பிலை

 செய்முறை :
1,   நான்கு வாழைக்காய் எடுத்துக்கொள்ளவும் தோல் நீக்கி வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.1,  ஒரு கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
2,  எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்க்கவும்
3,  கடுகு பொரிந்ததும் வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.1,  வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
2,  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு தக்காளி வதங்கும் வரை வதக்கி விடவும்.1, தக்காளி வதங்கியதும் வெட்டி வைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து தக்காளியுடன் ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
1,  இரண்டு மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள்
2, அரை மேசைக்கரண்டி காஷ்மீரி சில்லி பவுடர்
3, கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் சேர்க்கவும்.1, மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கிளறி விடவும்..
2, வாழைக்காய் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்
 5 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வாழைக்காயை வேக வைத்து இறக்கவும்.
  சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.


 தயாரிப்பு       செய்யும்        மொத்த 
நேரம்                  நேரம்            நேரம்
10 நிமிடம்  +15 நிமிடம்  = 25 நிமிடம்

 பரிமாறல்               சமையல்
 5 பேர்                         இந்தியன்

 வாழைக்காய் வறுவல் ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் எலுமிச்சை சாதம் ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடும் போது மிகவும் சுவையுடன் இருக்கும்.
 வாழைக்காய் மட்டுமல்லாமல் வாழை மரம் முழுவதும் சத்துமிக்க உணவு மனிதர்கள் உண்ணக் கூடிய உணவாக விளங்குகிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு