அரைத்து வைத்த கோழி குழம்பு 😋
தேவையான பொருட்கள் :
1, சிக்கன் அரை கிலோ
2, வெங்காயம்-2
3, இஞ்சி பூண்டு விழுது ஒரு tsp
4, எண்ணை 4 மேஜைக்கரண்டி
5, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை,- தலா - 2
6, சோம்பு அரை மேசைக்கரண்டி
7, கருவேப்பிலை கொத்தமல்லி
8, குழம்பு மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
9, காஷ்மீரி மிளகாய்த்தூள் அரை மேஜைக்கரண்டி
10, கரம் மசாலா அரை மேசைக்கரண்டி
11, உப்பு தேவையான அளவு
மசாலா அரைக்க: தேவையான பொருட்கள் :
1, சின்ன வெங்காயம் 20
2, பெரிய வெங்காயம் ஒன்று
3, காய்ந்த மிளகாய் மூன்று
4, கருவேப்பிலை ஒரு கொத்து
5, தக்காளி மூன்று
6, எண்ணெய் 2 மேசைக்கரண்டி
(வதக்கி அரைத்துக் கொள்ளவும் )
செய்யும் முறை :
2, எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்க்கவும்.
1, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் தக்காளியை வெட்டி சேர்க்கவும்.
1, தக்காளி நன்கு வதங்கி வந்ததும் ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
1, எண்ணெய் காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை அரை மேசைக்கரண்டி சோம்பு சேர்க்கவும்.
2, சோம்பு பொரிந்ததும் பெரிய வெங்காயம் ஒன்றை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.1, வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
2, பின் சுத்தம் செய்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.1, ஆறவைத்த வெங்காய தக்காளி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
2, சிக்கன் துண்டுகளை தண்ணீர் பிரிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும்.1, பின் அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுது சிக்கன் துண்டுகள் உடன் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
2, இரண்டு மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி கரம்மசாலா அரை மேஜைக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்க்கவும்.1, மசாலாவை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2, பின் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.1, ஒரு மூடி போட்டு மூடி மிதமான தீயில் 10 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்கவும்.
2, சிக்கன் துண்டுகளை நன்றாக வெந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி கருவேப்பிலை தூவி இறக்கவும்.1, சுவையான அரைத்து வைத்த கோழி குழம்பு தயார்.
2, சாதம் இட்லி தோசை சேமியா ஆகியவற்றுடன் பரிமாறலாம்
சமையல் தயாரிப்பு மொத்த
நேரம் நேரம் நேரம்
20 நிமிடம்+ 10 நிமிடம் = 30 நிமிடம்
பாடநெறி சமையல்
முதன்மைபாடநெறி இந்தியன்
கருத்துகள்
கருத்துரையிடுக