பருப்பு சட்னி

தேவையான பொருட்கள்.
1, துவரம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன்
2, உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
3, பூண்டு 10 பல்
4,  வெங்காயம் 2
5, காய்ந்த மிளகாய் மூன்று
6,  கருவேப்பிலை ஒரு கொத்து
7, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
8, உப்பு தேவையான அளவு.

 செய்முறை
1, ஒரு கடாயை வைத்துக்கொள்ளவும்     3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்         சேர்க்கவும்.
2,  எண்ணெய் காய்ந்ததும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
3, பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுபட்டதும் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.1, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
2, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
3, பொன்னிறமாக வதக்கவும்.1, ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.1, மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.1, அரைத்த சட்னியை ஒரு கப்பில் சேர்க்கவும்.
2, எண்ணெய் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்
 சுவையான பருப்பு சட்னி தயார்.
                                             
 தயாரிப்பு       செய்யும்    மொத்தம் 
நேரம்                நேரம்            நேரம்
5 நிமிடம்   +  10 நிமிடம் =15 நிமிடம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு