முருங்கைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள் :
பருப்பு - 100கிராம் 
வெங்காயம் -2
தக்காளி -2
பூண்டு - 10பல்
முருங்கைக்காய் -3
சாம்பார் பொடி - 2 மேஜை கரண்டி
மஞ்சள் -1/4 மேஜை கரண்டி
புளி -எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி கருவேப்பிலை

செய்முறை :
குக்கரில் பருப்பு பூண்டு சீரகம் அரை மேஜை கரண்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் வைத்து எடுத்து கொள்ளவும்..
புளி தண்ணீரில் ஊரவைத்து கொள்ளவும் 
தாளிக்க:
எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ளவும்.
எண்ணெய் காய்ததும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து தாளிக்கவும்
வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு வெட்டி வைத்த முருங்கைக்காய் சேர்க்கவும்
சாம்பர் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
பின்பு வேகவைத்த பருப்பு உடன் புளி கரைசல் சேர்த்து நன்கு கடைந்து சேர்க்கவும் சாம்பார் கொதித்ததும் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்... சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு