கோதுமை அல்வா

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு -250கிராம்
தண்ணீர்   -750g
சர்க்கரை -  400g
ஏலக்காய் பொடி- 1/2 tsp
நெய் -200g
கலர் -ஒரு சிட்டிக்கை
உப்பு -""

செய்முறை :
கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து. தண்ணீர் சேர்த்து 2மணி நேரம் ஊறவை கவும். பின்பு 2மணி நேரம் கழித்து மாவை நன்கு கரைத்துக்கொள்ளவும்.
கரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் துணி வைத்து வடிகட்டி கொள்ளவும்.ஒரு  பாத்திரத்தில் 2மேஜை கரண்டி நெய் சேர்த்து முந்திரி வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் வடித்து வைத்த கோதுமை பாலை சேர்த்து கொள்ளவும்.
நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.கெட்டி  ஆனதும்  சர்க்கரை சேர்த்து  கிண்டவும் பின்
கலர் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக நெய்  சேர்த்து கிளறி  கொண்டே இருக்கவும்.ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.
அல்வா நன்கு கெட்டி ஆனவுடன்
முந்திரி சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆரியது கட் செய்து பரிமாரவும்.சுவையான கோதுமை அல்வா தயார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு