மீல் மேக்கர் பிரியாணி

தேவையான பொருட்கள் :
கடலை எண்ணெய் -5 மேஜை கரண்டி
பட்டை 3, லவங்கம்,3, ஏலக்காய் 2.
சோம்பு 2. பிரியாணி இலை 2,
வெங்காயம் -3
இஞ்சி பூண்டு விழுது -2 tsp
பச்சைமிளகாய் -3
தக்காளி -3
மிளகாய் தூள் -2tsp
தனியா தூள் -2tsp
மஞ்சள் தூள் -1/4tsp
கரம்மசலா-1tsp
எலுமிச்சை -1/2
மீல் மேக்கர் -50 கிராம்
சீராக சம்பா அரிசி -1/2 கஃ
உப்பு தேவையான அளவு

செய்முறை :
எண்ணெய் சூடானதும் மசாலா பொருட்களை சேர்க்கவும்.
வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி  சேர்த்து நன்கு  வதக்கவும்.மஞ்சள் தூள்  மிளகாய் தூள்  கரம் மசாலா  மஞ்சள் சேர்த்து  வதக்கவும்.மீல்  மேக்கர்,  கொத்தமல்லி,  புதினா, எலுமிச்சை  சாறு, சேர்த்து 5நிமிடம்  வதக்கவும்..பின்  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். (1கப்  அரிசி 2 கப் தண்ணீர் )தண்ணீர்  கொதிவந்ததும்  அரிசி சேர்த்து  குக்கர்ரை மூடி ஒரு விசில் விடவும். (மிதமான  தீயில் வைக்கவும் )சுவையான  மீல் மேக்கர்  பிரியாணி தயார்.. 😋😋

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு