சிக்கன் குழம்பு
சிக்கன் குழம்பு. தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 மேஜை கரண்டி
வெங்காய -2
இஞ்சி பூண்டு விழுது -1மேஜை கரண்டி
தக்காளி -2
சிக்கன் -1/2 கிலோ
மிளகாய் தூள் -2 மேஜை கரண்டி
தனியா தூள் - 3 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் -1/4 மேஜை கரண்டி
கரம்மசாலா -1மேஜை கரண்டி
செய்முறை :
முதலில் ஒரு கடாய் வைத்து 3 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றவும்
எண்ணெய் காய்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும்
வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்
பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
பின் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 3 நிமிடம் நன்றாக கலந்து விடவும்
தேவையான அளவு உப்பு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இரக்கவும்
நம் சுவையான சிக்கன் குழம்பு தயார்
கருத்துகள்
கருத்துரையிடுக