சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பட்டை3,லவங்கம்3. ஏலக்காய்2. சோம்பு10கி
சிக்கன் -1/2கஃ
வெங்காயம் -150கிராம
இஞ்சி பூண்டு விழுது -75கி
தயிர் -50 கிராம்
எலுமிச்சை -1
தக்காளி -100கி
தனி மிளகாய் தூள்- 2 மேஜை கரண்டி
தனியா தூள்- 3 மேஜை கரண்டி
கரம் மசாலா -11/2 "
சீராகசம்பா அரிசி -1/2 கிலோ
கொத்தமல்லி புதினா அரை கட்டு
நெய் எண்ணெய் -100g
செய்முறை :
முதலில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்
பின்பு மசாலா பொருட்களை சேர்த்து கொள்ளவும்
வெங்காயம் சேர்த்து நன்றாக பொண்ணிரமாக வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
தக்காளி சேர்த்து வதக்கி கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்
சிக்கன் சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின்பு மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்
தயிர் எலுமிச்சை சாறு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5நிமிடம் வதக்கி விடவும்
ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் கொதிக்க வேண்டும்
அரிசி சேர்த்து கொதி வந்ததும் குக்கர் மூடி ஒரு விசில் வைத்து 10 நிமிடம் கழித்து திறக்கவும்
சுவையான பிரியாணி தயார்..
கருத்துகள்
கருத்துரையிடுக