இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருணைக்கிழங்கு 65

படம்
 தேவையான பொருட்கள் : 1, கருணைக்கிழங்கு 300 கிராம் 2, அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி  3, சோள மாவு ஒரு மேஜைக்கரண்டி  4, மஞ்சள் தூள் 1/4 tsp 5,  மிளகாய் தூள் 1 tsp 6, அரை எலுமிச்சை பழச்சாறு 7, உப்பு தேவையான அளவு  செய்முறை விளக்கம் படத்துடன் : 1 , கருணைக் கிழங்கின் தோல்களை அகற்றி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். 11, அரிசி மாவு சோள மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும். 1, தேவையான அளவு உப்பு மற்றும் அரை எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். 1, அனைத்தையும் நன்றாக கலந்து வெட்டி வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்து விடவும். 1, பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு சூடானதும் கலந்து வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.  1, சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து பொரிக்கவும் மொறுமொறுப்பான கருணைக்கிழங்கு 65 தயார்.  தயாரிப்பு நேரம்  10 நிமிடம்  சமையல் நேரம்  5 நிமிடம்  மொத்த நேரம்  15...

ரவா கேசரி

படம்
 தேவையான பொருட்கள்: 1, ரவை 200 கிராம் 2, எண்ணெய் அல்லது நெய் 50 கிராம் 3, முந்திரி திராட்சை ஏலக்காய் 4, உப்பு ஒரு சிட்டிகை 5, சர்க்கரை 150 கிராம் 6, தண்ணீர் 400 கிராம் 7, ஃபுட் கலர் ஒரு சிட்டிகை  செய்முறை விளக்கம் படத்துடன்.: 1, இருநூறு கிராம் ரவை எடுத்து வைத்துக் கொள்ளவும். 2, ஒரு பாத்திரத்தில் 50 கிராம் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். 3, எண்ணை காய்ந்ததும் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து வறுக்கவும். 1, முந்திரி வறுபட்டதும் 400 கிராம் தண்ணீர் சேர்க்கவும். 2, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 150 கிராம் சர்க்கரை சேர்க்கவும்.  1, தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு சிட்டிகை ஃபுட் கலர் சேர்க்கவும். 2, பின் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து விடவும் கைவிடாமல். 3, கடைசியாக இடித்து வைத்து ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும். 1, சுவையான ரவா கேசரி தயார்  சமையல் நேரம் 15 நிமிடம்  தமிழர்களின் மிக முக்கிய இனிப்பு பண்டங்களில் ஒன்று ரவாகேசரி திருவிழாக்கள் விசேஷ தினங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் மிக முக...

நூடுல்ஸ் 😋

படம்
தேவையான பொருட்கள் : 1, நூடுல்ஸ் 1 பாக்கெட் 2, எண்ணை 4 மேஜைக்கரண்டி 3, வெங்காயம்-2 4, தக்காளி-2 5, இஞ்சி பூண்டு விழுது 1tsp 6, காஷ்மீரி மிளகாய்த்தூள் 1tsp 7, உப்பு தேவையான அளவு 8, சர்க்கரை ஒரு மேசைக்கரண்டி  குறிப்பு:  நூடுல்ஸை கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வெந்ததும் வடித்து வைத்துக்கொள்ளவும் ஒட்டாமல் இருக்க  சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.  செய்முறை விளக்கம் படத்துடன் : 1,  ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 1, தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் எடுத்து வைத்த நூடுல்ஸ் முழுமையாக சேர்த்து நன்கு வெந்தவுடன்  வடித்து வைத்துக் கொள்ளவும். 1 , நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து கிளறி விடவும். 2, ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் சேர்க்கவும். 3, எண்ணை காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். 1, வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 2...