உருளைக்கிழங்கு வருவல்
தேவையான பொருட்கள் :
1, உருளைக்கிழங்கு 3
2, சோள மாவு ஒரு மேசைக்கரண்டி
3, அரிசி மாவு அரை மேஜைக்கரண்டி
4, உப்பு தேவையான அளவு
5, மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
6, எண்ணெய் பொரித்தெடுக்க.
7, இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
1, மூன்று உருளைக்கிழங்கை எடுத்து தோலுடன் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
1, பின் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி அரிசி மாவு சோள மாவு மிளகாய் தூள் சேர்க்கவும்.
1, பின் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி அரிசி மாவு சோள மாவு மிளகாய் தூள் சேர்க்கவும்.
1, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.1, நன்கு கலந்த கலவையில் வெட்டிவைத்த உருளைக்கிழங்குகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
1, மசாலா நன்கு உருளைக் கிழங்குகளில் கலந்து விடவும்
2, பின் ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் எழுத்து உருளைக்கிழங்குகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
1, சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
செய்யும் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
பரிமாறுதல்
3 பேர்
குறிப்பு:
வெட்டி வைத்த உருளைக்கிழங்கு மசாலா தடவி உடனடியாக எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்
அரிசி மாவு சேர்ப்பது அவசியம் மசாலா உருளைக்கிழங்கு இருந்து உதிராமல் இருக்க அரிசிமாவு உதவும்.
உருளைக்கிழங்கு வருவல்
இந்த உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு வருவல் .
சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் புளி சாதம் துடனும் பரிமாறலாம்.
மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் அதிக சுவை மிகுந்து இருக்கும். கண்டிப்பாக முயற்சிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக