கத்தரிக்காய் புளி குழம்பு
தேவையான பொருட்கள் : 1, கடலை எண்ணெய் -4 tsp 2, கடுகு சீரகம் - 1/2 tsp 3, வெங்காயம் -2 4, பூண்டு -10 பல் 5, தக்காளி -4 6, கத்தரிக்காய் -1/2 tsp 7, மஞ்சள் தூள் -1/4 tsp 8, குழம்பு மிளகாய் தூள் - 2 tsp 9, உப்பு தேவையான அளவு 10, கொத்தமல்லி - சிறிதளவு 11, புளி எலுமிச்சை அளவு செய்முறை விளக்கம் படத்துடன். 1, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். 2,எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்க்கவும். 3. வெங்காயம் மற்றும் பூண்டு பொருட்களை சேர்த்து வதக்கவும். 1, வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 2, வெட்டி வைத்த கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். 1, தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும் 1, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 1, ஒரு கொதி வந்ததும் புளி கரைசலை சேர்க்கவும். 2, கடைசியாக சிறு நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்க்கவும். 1, கத்தரிக்காய் நன்கு வெந்ததும் கடைசியாக சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 2, சுவையான கத்தரிக்காய் புளிக்குழம்பு தயார். ...